உலகின் அதிபயங்கரமான கிறிஸ்துமஸ் விழா பற்றி தெரியுமா?

Report Print Harishan in ஜேர்மனி

ஐரோப்பாவில் சில நாடுகளில் உலகின் அதி பயங்கரமான கிறிஸ்துமா விழா கொண்டாடப்படுகிறது.

பொதுவாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் என்றாலே அன்பின் மிகுதியோடு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு, பாடல்கள் பாடுவது, இனிப்புகள் மற்றும் கேக் வகைகள் போன்றவற்றை பகிர்ந்து கொண்டு மகிழ்வது ஆகும்.

ஆனால் ஐரோப்பாவின் Czech குடியரசு நாட்டில் சற்று வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகிறது, பேய்களை போன்ற வேடமணிந்த நபர்கள் சிலர் மிகவும் கொடூரமாக குழந்தைகளை அடிப்பது போல் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

மிக நீண்ட தலைமுடியுடன், கோரமான பற்களை கொண்டுள்ள அந்த நபர்கள் கையில் தடியுடன் வலம் வருகின்றனர்.

குழந்தைகளை பாட்டு பாடி நடனம் ஆடும்படி அவர்கள் அச்சுறுத்தினாலும் குழந்தைகள் பதற்றத்துடனே காணப்படுவது பரிதாபமாக உள்ளது.

குறிப்பாக குறும்பு செய்யும் குழந்தைகளை அச்சுறுத்தவே இது போன்ற விழா கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.

ஆஸ்ட்ரியா நாட்டில் தோன்றிய இந்த பாரம்பரிய கிறிஸ்துமஸ் விழா, ஐரோப்பாவின் ஜேர்மனி, கிரொஷியா, சிலோவேனியா போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்