இறந்த போன பாட்டிக்கு கடிதம் எழுதிய பேரன்: பாட்டியிடமிருந்து வந்த பதில்

Report Print Raju Raju in ஜேர்மனி
413Shares
413Shares
ibctamil.com

ஜேர்மனியில் இறந்து போன பாட்டிக்கு பேரன் கடிதம் எழுதிய நிலையில் அதற்கு பேரனுக்கு பதில் கடிதம் வந்துள்ளது.

நாட்டின் லோயர் சக்சோனி மாகாணத்தை சேர்ந்தவர் கிரிஸ்டின், இவர் மகன் லூயிஸ் (7), லூயிஸின் பாட்டி சில வாரங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார்.

அவரின் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்துக்கு சென்ற லூயிஸ் பாட்டிக்கு கடிதம் ஒன்றை எழுதி பலூன் உள்ளே வைத்து மேல் நோக்கி பறக்கவிட்டான்.

அதில், குட்பை பாட்டி என எழுதியிருந்தான், பாட்டி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தாலேயே லூயிஸ் கடிதம் எழுதினான்.

இந்நிலையில் பாட்டி எழுதியது போன்ற பதில் கடிதம் லூயிஸுக்கு வந்துள்ளது. அதில், அன்பு லூயிஸ், எனக்கு கடிதம் அனுப்பியதற்கு நன்றி, உன்னை தினமும் நான் பார்ப்பேன், உன்னை பாதுகாக்கும் தேவதையாக இருப்பேன். ஐ லவ் யூ லூயிஸ், அன்புடன் உன் பாட்டி என எழுதப்பட்டிருந்தது.

கடிதமானது சிறுவன் லூயிசை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, கடிதத்தை பார்த்தவுடன் அவன் ஆனந்த கண்ணீர் வடித்தான்.

இது குறித்து கிரிஸ்டின் கூறுகையில், பதில் கடிதம் வந்ததை என்னால் நம்பவே முடியவில்லை, இதை எழுதியது யார் என இன்னும் தெரியாத நிலையில் அது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என கூறியுள்ளார்.

இந்நிலையில் பாட்டி அனுப்பியதாக வந்த கடிதத்தை கிரிஸ்டின் பேஸ்புக்கில் பதிவிட அது வைரலாகியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்