மில்லியன் கணக்கில் வேலையிழப்பு: ஜேர்மனியை எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
306Shares
306Shares
ibctamil.com

டிஜிட்டல்மயமாக்கலின் காரணமாக ஜேர்மனியில் இன்னும் பத்தாண்டுகளில் பத்தில் ஒருவர் வேலையிழக்க நேரிடலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

IT association Bitkom மேற்கொண்ட ஆய்வு ஒன்று, மனிதர்கள் செய்யும் வேலைகளில் இனி ரோபோக்கள் பயன்படுத்தப்பட இருப்பதால், வரும் ஐந்தாண்டுகளுக்குள் 3.4 மில்லியன் பேர் வேலை வாய்ப்பு இழப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.

ஜேர்மனியில் தற்போது 33 மில்லியன் பணியாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை பத்தில் ஒன்றாகக் குறையும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பல்வேறு துறைகளில் 20க்கு அதிகமான பணியாளர்களைக் கொண்ட 500 நிறுவனங்களில் Bitkom நிகழ்த்திய இந்த ஆய்வில் டிஜிட்டல்மயமாக்கலின் விளைவாக நான்கில் ஒரு நிறுவனம் மூடப்படலாம் என அஞ்சப்படுகிறது.

ஆனால் ஜேர்மன் அரசாங்கம் இதைக்குறித்து கவலைப்படவில்லை என்று தெரிவித்துள்ள Bitkomஇன் இயக்குநரான Achim Berg தொலைத் தொடர்பு தொழில் நுட்பத்துறையில் மட்டுமே 1990இல் 200000பேர் வேலை பார்த்த இடத்தில் இப்போது வெறும் 20000பேர் மட்டுமே வேலை பார்ப்பதாகவும் 15 வருடங்களில் டிஜிட்டல்மயமாக்கலின் காரணமாக 90 சதவிகிதம்பேர் வேலையிழந்து விட்டதாகவும் தெரிவிக்கிறார்.

அடுத்து வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் துறைக்கும் இதே நிலை ஏற்படலாம் என்று அவர் எச்சரிக்கிறார்.

ஆனால் மாறுபட்டக் கருத்துகளும் உலவுகின்றன. Mannheim ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், டிஜிட்டல்மயமாக்கல் அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

கணினிகளால் சில குறிப்பிட்ட வேலைகளைத்தான் செய்ய முடியுமேயொழிய முழுமையான வேலைகளை செய்ய இயலாது என்று கூறியுள்ள அவர்கள் டிஜிட்டல்மயமாக்காலால் நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும் என்பதால், அவை இன்னும் அதிக பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் என்கிறார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்