காதலியை 7 முறை குத்தி கொலை செய்த புகலிடக்கோரிக்கையாளருக்கு 8 ஆண்டுகள் சிறை

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் தனது முன்னாள் காதலியை கொலை செய்த புகலிடக்கோரிக்கையாளருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானை சேர்ந்த Abdul D என்ற 20 வயது இளைஞர் 2016 ஆம் ஆண்டு ஜேர்மன் நாட்டுக்கு புகலிடக்கோரிக்கையாளராக தஞ்சம் அடைந்துள்ளார்.

இவரது, புகலிடக்கோரிக்கை விண்ணப்பம் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், இவர் தன்னுடன் பள்ளியில் பயின்று வந்த மியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

காதலர்களாக இருந்த இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்துள்ளனர். இந்த பிரிவின் காரணமாக தனது முன்னாள் காதலி மீது கோபம் கொண்ட Abdul D, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஷாப்பிங் மாலில் வைத்து 7 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இதுதொடர்பாக இவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. மேலும், இவர் தனது வயது 15 எனது பொய் கூறியுள்ளார். ஆனால் இவரது உண்மையான வயது 20 என தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், Abdul D - க்கு 8 1/2 ஆண்டுகள் சிறை தண்டடைன விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers