கேள்விக்கணைகளால் மெர்க்கலை துளைத்தெடுத்த மாணவர்கள்: சளைக்காமல் பதிலளித்த சேன்ஸலர்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பெர்லின் பள்ளி ஒன்றிற்கு வருகை தந்த ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலை பள்ளி மாணவிகள் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தனர்.

மாணவர்களின் ஐரோப்பிய புராஜக்ட்களை காண்பதற்காக ஏஞ்சலா மெர்க்கல் பெர்லின் பள்ளி ஒன்றிற்கு வருகை புரிந்தார்.

பணிவோடு சேன்ஸலரோடு பேசினாலும், ஐரோப்பாவின் எதிர்காலம், சமூக சமநிலையின்மை, பள்ளிகளை டிஜிட்டல்மயமாக்கல் என பல விடயங்கள் குறித்து அரை மணி நேரத்திற்கு கேள்விக்கணைகளை மாணவர்கள் தொடுக்க, ஏஞ்சலாவும் எதற்கும் தயாராகத்தான் வந்திருப்பார் போலும், சளைக்காமல் பதிலளித்தார்.

மிகவும் ரிலாக்ஸாக, என்ஜாய் செய்து கேள்விகளை எதிர்கொண்டார் சேன்ஸலர்.

இதைவிட கேள்விகள் சூடாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்குமே இருந்தது.

காரணம் சீதோஷ்ண மாற்றம் குறித்து அரசு எதுவும் செய்யாமல் இருப்பதை எதிர்த்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் நேரத்தில் சரியாக ஏஞ்சலா மாணவர்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு அரசியல்வாதி என்ற முறையில் இந்த எதிர்ப்பு எனக்கு பிடித்திருக்கிறது, காரணம் அது நல்ல நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படுகிறது என்று கூறிய ஏஞ்சலா மெர்க்கல் நீங்கள் எங்களை உந்தித்தள்ளுவது நல்லதுதான் என்றார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers