மேடையில் கடுமையான உடல் நடுக்கத்துடன் காணப்பட்ட ஏஞ்சலா மெர்க்கல்

Report Print Vijay Amburore in ஜேர்மனி

ஜேர்மனியின் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் உடல்நிலை காரணமாக இந்த மாதத்தில் இரண்டாவது முறை கட்டுங்கடங்காத உடல்நடுக்கத்துடன் காணப்பட்டுள்ளார்.

64 வயதான ஏஞ்சலா மெர்க்கெல் இன்று ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மேயரை சந்தித்தபோது கடும் உடல்நடுக்கத்துடன் காணப்படும் வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின.

ஆனால் அவரது செய்தி தொடர்பாளர் ஜேர்மன் சேன்ஸலர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் ஏஞ்சலா மெர்க்கெலின் கைகள் நல்ல நடுக்கத்துடன் இருப்பதையும், அதனை அவர் தடுக்க முயற்சிப்பதையும் காணலாம்.

இதனை பார்த்த அவருடைய உதவியாளர் வேகமாக தண்ணீர் கொடுக்க ஓடிவந்தார். ஆனால் அவர் அதனை மறுத்துவிடுகிறார்.

பத்து நாட்களுக்கு முன்பு மெர்க்கெல் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமைர் ஜெலென்ஸ்கியை சந்தித்தபோது, அவரது கைகள் நடுக்கத்துடன் காணப்பட்டது. சிறிது தண்ணீர் குடித்ததும் அது சரியானது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததே அதற்கான காரணம் என அவர் விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் நடுக்கம் ஏற்பட்டிருப்பதற்கு, தைராய்டு மற்றும் குறைந்த இரத்த சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் ஊகித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்