ஜேர்மனியின் ஹனோவரில் அவசரமாக வெளியேற்றப்பட்ட 15 ஆயிரம் மக்கள்.. காரணம் இதுதான்!

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியில் உள்ள ஹனோவர் நகரில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 15,000 மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பின்னர் மீண்டும் வீடு திரும்பினர்.

ஹனோவர் நகரில் இரண்டாவது உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

இந்நிலையில், நேற்றைய தினம் மாலை 250 கிலோ கிராம் எடையுள்ள வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட குண்டு என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக நகரில் இருந்து 15,000 மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

வெடிகுண்டுத் தடுப்பு குழுவினர், குறித்த வெடிக்குண்டை சோதனையிட உள்ளதாகவும், பின்னர் இதுதொடர்பாக அனைத்து விடயங்களையும் தெளிவுபடுத்துவதாகவும் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்ட பின், இன்று வெளியேற்றப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

இரண்டாம் உலகப்போரின் போது 50 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு டஜன் நகரங்களின் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அதில் ஹனோவரும் ஒன்றாகும்.

கடந்த சூன் மாதம் பெர்லினின் பிரபல Alexanderplatz சதுக்கத்தில் பாதுகாப்பு சாதனம் ஒன்று வைக்கப்பட்டது.

முன்னதாக, 2017ஆம் ஆண்டு Frankfurt பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டபோது, சுமார் 60,000 மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். இதுவே இதுவரை வெளியேற்றப்பட்ட அதிகபட்ச மக்கள் தொகையாகும்.

ஜேர்மனியின் வார இதழான Der Spiegel, போரின் போது ஜேர்மனியின் மீது வீசப்பட்ட மில்லியன் கணக்கான குண்டுகளில் பத்தில் ஒன்று கூட வெளியேறவில்லை என்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதேபோல் கடந்த திங்கட்கிழமையன்று, மேற்கு நகரமான Cologneயில் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 4 ஆயிரத்து 800 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers