பிரித்தானியாவில் மிகப்பெரிய சந்தையை உருவாக்கும் ஜேர்மனி நிறுவனம்!

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியின் Aldi பல்பொருள் அங்காடி நிறுவனம், பிரித்தானியாவில் தங்கள் தொழிலை விரிவுபடுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

Aldi என்பது ஜேர்மனியில் பிரபலமான பல்பொருள் அங்காடி நிறுவனமாகும். இந்நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பிரித்தானியாவில் மிகப்பெரிய சந்தையை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் 45 முதல் 100 கிளைகளை நிறுவ உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2021ஆம் ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளை திறந்து, 5000 வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ளதாகவும்,

2025ஆம் ஆண்டு முடிவில் தற்போது இருக்கும் 840 தளங்களை 1,200 தளங்களாக விரிவுபடுத்துவதே தங்கள் இலக்கு என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Aldiயின் போட்டி நிறுவனமான Lidl, சில மாதங்களுக்கு முன்பு பிரித்தானியாவில் 40 புதிய தளங்களை நிறுவ உள்ளதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்தே Aldi இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த இரு நிறுவனங்களும், பிரித்தானிய பல்பொருள் அங்காடி நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் Tesco, Sainsbury's, Asda, Morrisons ஆகிய நான்கு சங்கிலி நிறுவனங்களின் பங்குகளை கைப்பற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்