ஜேர்மனிக்கு செல்கிறீர்களா?: ஒரு மாதம் இலவசமாக தங்கலாம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

அழகிய ஜேர்மன் நகரமாகிய Görlitz, ஒரு மாதம் இலவசமாக தங்குவதற்கு அனுமதியளிக்கிறது.

அதன் பின்னணியில் ஒரு முக்கிய காரணமும் உள்ளது. இத்தாலியில் வசிக்கும் Eva Bodenmüller என்ற பெண், ஜேர்மன் நகரம் ஒன்று ஒரு மாதத்திற்கு இலவசமாக வாழ அழைப்பு கொடுக்கும் விடயம் குறித்த செய்தியை வாசித்தார்.

அவரும், அவரது காதலரான Carsten Borckம், விரைவில் இத்தாலியிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்கள். அவர்கள் பெர்லினில் பிறந்தவர்கள்.

மீண்டும் தாங்கள் பிறந்த ஊருக்கே திரும்ப திட்டமிட்டிருந்த தம்பதி, அந்த செய்தியை வாசித்ததும், பெர்லினுக்கு பதிலாக ஏன் Görlitzக்கு செல்லலாம என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டதாக தெரிவிக்கிறார் Eva.

பிரபல ஹொலிவுட் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள Görlitz நகரத்தில் ஒரு முக்கிய பிரச்னை இருக்கிறது.

அதாவது Görlitz நகரில் ஊதியம் மிகவும் குறைவாகும். 1989ஆம் ஆண்டு பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட பிறகு மக்கள் நகரை விட்டு வெளியேறி மேற்கு பகுதிக்கு இடம்பெயர்ந்ததால், Görlitzஇன் மக்கள்தொகை 25 சதவிகிதம் குறைந்து, 2013இல் 54,000 ஆயிற்று.

எனவே நகர அதிகாரிகள் அதை மாற்றி மீண்டும் மக்களை Görlitzஐ நோக்கி ஈர்க்க ஏதாவது செய்வது என முடிவு செய்துள்ளனர்.

அதன் முதல் படிதான் இந்த ஒரு மாத இலவச தங்குமிடம் வழங்கும் திட்டம்.

அதற்கு பதிலாக அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், மக்கள் இந்த நகரத்தில் எதையெல்லாம் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தினால் (feedback) போதும்!

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்