சிரியாவை சூரையாடும் துருக்கிக்கு எதிராக ஜேர்மனி எடுத்த அதிரடி முடிவு

Report Print Basu in ஜேர்மனி

தற்போதைய சூழ்நிலையில் துருக்கிக்கு எந்த ஆயுதங்களையும் ஜேர்மனி வழங்காது என்று அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்ததோடு, வடக்கு சிரியாவில் தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு துருக்கியை பலமுறை வலியுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

சமீபத்திய நாட்களில், துருக்கியை நான் கடுமையாக வலியுறுத்தியுள்ளேன், குர்திஷ் ராணுவத்திற்கு எதிரான அதன் ராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு நான் இப்போது மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று மெர்கல் ஜேர்மனியின் நாடாளுமன்றத்தின் கீழ் சபைக்கு தெரிவித்தார்.

இது மிகப்பெரிய புவிசார் அரசியல் விளைவுகளைக் கொண்ட ஒரு மனிதாபிமான நாடகம், எனவே தற்போதைய நிலைமைகளின் கீழ் ஜேர்மனி எந்தவொரு ஆயுதங்களையும் துருக்கிக்கு வழங்காது என்று அவர் மேலும் கூறினார்.

துருக்கி மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைக்கு பதிலடித் தடையை தயாரித்து வருதவதாக துருக்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், பிரித்தானியா, கனடாவை தொடர்ந்து துருக்கிக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை தற்போது ஜேர்மனியும் தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்