வெறும் 5 நிமிடத்தில் கொரோனா உள்ளதா என்பதை கண்டுபிடிக்கும் பரிசோதனை முறை தொடக்கம்! ஆச்சரிய வீடியோ

Report Print Raju Raju in ஜேர்மனி

கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கியுள்ளதா இல்லையா என்பதை வெறும் 5 நிமிடத்தில் கண்டுபிடிக்கும் பரிசோதனை ஜேர்மனியில் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டாரா என்பதை அறிய பல பரிசோதனைகள் செய்யப்பட்டு, அதன் முடிவை தெரிந்து கொள்ள 14 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையே உள்ளது.

ஆனால் ஜேர்மனியில் முதல் முறையாக Drive-in coronavirs Test Center என்ற பரிசோதனை முறை கடந்த திங்கட்கிழமையில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி அதற்கான Stationல் காரில் வரும் நபர்கள் இருக்கையில் உட்கார்ந்தவாறே ஜன்னலை மட்டும் கீழே இறக்க வேண்டும்.

பின்னர் மருத்துவ குழுவினர் இருக்கையில் இருக்கும் நபர் மூக்கில் சிறிய குச்சி போன்ற கருவியை வைத்து பரிசோதனை செய்கின்றனர்.

இந்த பரிசோதனைகள் 5 நிமிடங்களில் முடிந்து விடுகிறது. இதன்பின்னர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் தங்கள் வீட்டுக்கு உள்ளேயே இருக்க வேண்டும்.

இதையடுத்து பரிசோதனை முடிவுகள் 12ல் இருந்து 24 மணி நேரத்துக்குள் அவர்களுக்கு தெரிவிக்கப்படும். பரிசோதனை முறையை விளக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...