ஜேர்மானியர்கள் கொரோனாவை விட அதிகமாக பயப்படுவது எதற்கு தெரியுமா?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மானியர்கள் கொரோனாவைவிட அதிகமாக ஒரு விடயத்திற்கு, சரியாக சொன்னால் ஒரு நபருக்கு பயப்படுகிறார்களாம்.

ஜேர்மானியர்கள் எதற்கு அதிகம் பயப்படுகிறார்கள் என்பதை அறிவதற்கான ஆய்வு ஒன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.

அதில் தெரியவந்த முடிவுகள் ஆச்சரியப்படும் விதத்தில் அமைந்திருந்தன. கடந்த 28 ஆண்டுகளாக ஜேர்மானியர்கள் எதற்கு அதிகம் பயப்படுகிறார்கள் என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த ஆய்வில், முன்பு பல ஆண்டுகளாக எத்ற்கெல்லாம் அவர்கள் பயப்பட்டார்களோ, அவற்றின் மீதான பயம் அவர்களுக்கு இப்போது குறைந்துவிட்டது தெரியவந்துள்ளது.

மக்கள் மாஸ்க் அணிவது என்னவோ உண்மைதான், ஆனால், அது கொரோனாவைக் கண்டு பயந்து அல்ல, முன்னெச்சரிக்கை காரணமாகத்தான்.

சொல்லப்போனால், வெறும் 32 சதவிகிதத்தினர்தான் நோய்வாய்ப்படுவது குறித்து தாங்கள் அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்கள்.

அதுவும் கொரோனாவைப் பொருத்தவரை, மூன்றில் ஒருவர் மட்டுமே தாங்களுக்கோ தங்கள் சமூக வட்டத்திற்குள் இருக்கும் மற்றவர்களுக்கோ கொரோனா தொற்றிவிடும் என பயப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.

சரி, விஷயத்திற்கு வருவோம், ஜேர்மானியர்களை அச்சுறுத்தும் பட்டியலில் முதலில் இருப்பது என்ன? நவம்பர் 3ஆம் திகதி அமெரிக்க வாக்காளர்கள் தங்கள் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க உள்ள நிலையில், அதாவது அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், மீண்டும் ட்ரம்ப் ஜனாதிபதியாக வந்துவிடுவாரோ என ஜேர்மானியர்கள் பயப்படுகிறார்களாம்.

ஆக, இதுதான் ஜேர்மானியர்களின் பயப் பட்டியலில் முதல் இடம் பிடிக்கும் விடயம். 53 சதவிகிதம் ஜேர்மானியர்கள், ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து பயப்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சீனாவுடனான வர்த்தக யுத்தம், ஜேர்மனி முதலான நட்பு நாடுகளுடனேயே சொற்போர் முதலானவற்றைப் பார்க்கும்போது, ஜேர்மானியர்களின் அச்சம் நியாயமானதுதான் போலிருக்கிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்