ஜேர்மனியில் குடியிருப்பு ஒன்றில் ஆயுதக் குவியல்: 250 துப்பாக்கிகள் பறிமுதல்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் காவல்துறையினர் சுமார் 250 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரக்கணக்கான சுற்று வெடிமருந்துகளை தீவிர வலதுசாரி அனுதாபியிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

வடமேற்கு மாநிலமான லோயர் சாக்சனியில் உள்ள அதிகாரிகள், வெள்ளிக்கிழமை மாலை முன்னெடுத்த அதிரடி சோதனை நடவடிக்கையில், ஹாம்பர்க்கிற்கு தெற்கே உள்ள சீவெட்டல் பகுதியில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பில் சனிக்கிழமை பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த நபர் தீவிர வலதுசாரி அனுதாபியாக இருக்கலாம் என கருதுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஜேர்மனியின் ஆயுத சட்டத்தை மீறுதல் மற்றும் போர் ஆயுதக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறுதல் உள்ளிட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய நபரிடம் இருந்து நீண்ட, குறுகிய மற்றும் போர் ஆயுதங்களைத் தவிர, பல ஆயிரம் சுற்று வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன.

தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் காரணமாக, இந்த விடயத்தில் கூடுதல் தகவல்கள் எதுவும் தற்போது வழங்க முடியாது எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

தீவிர வலதுசாரி வன்முறைகள் சமீபத்திய ஆண்டுகளில் ஜேர்மனியில் அதிகரித்து வருவது பாதுகாப்பு அமைப்புகளில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்