ஜேர்மனியில் பொது முடக்கம் அடுத்த மூன்று வாரங்கள் நீடிக்கும் என்றும், இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமானதால், ஜேர்மனி முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் 16-ஆம் திகதி கடைகள், பள்ளிகள் மற்றும் சேவைகளை மூடுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தது.
இந்த கட்டுப்பாடுகள் வரும் 10-ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதால், இந்த பொதுமுடக்கம் நீடிக்குமா? இல்லை தளர்வுகள் ஏதேனும் வருமா என்று மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளன.
இந்நிலையில், தற்போது அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியில், கொரோனா வைரஸ் பரவல் மற்றும் இறப்பு தொடர்ந்து கொண்டே இருப்பதால், இந்த பொதுமுடக்க கட்டுப்பாடுகளை நீட்டிக்க அரசுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி மக்கள் மீது கொண்ட அக்கறை காரணமாக, இந்த பொது முடக்கத்தை அடுத்த மூன்று வாரம், அதாவது ஜனவரி 31-ஆம் திகதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து 16 மாநில தலைவர்களுடன் அதிபர் Angela Merkel பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதில் இரண்டு மாநிலங்களைத தவிர மற்ற மாநிலங்கள் இந்த பொதுமுடக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதால், பொதுமுடக்கம் அடுத்த 31-ஆம் திகதி வரை நீடிக்கும் என்று நம்ப்பப்படுகிறது.