விலங்குகளிடமிருந்து பரவும் கொரோனா: ஜேர்மனியில் ஒருவர் பலி

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares

விலங்குகளிடமிருந்து பரவும் கொரோனா மீண்டும் ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை ஜேர்மன் ஆய்வகங்கள் உறுதி செய்துள்ளன.

கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி, mink என்னும் விலங்குடன் தொடர்புடைய Cluster 5 என்னும் புதிய திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக டென்மார்க் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

தற்போது, அதேவகை வைரஸ் ஜேர்மனியில் 10 பேருக்கு தொற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பவேரியாவில், இந்த புதிய வைரஸுக்கு முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இவ்வகை வைரஸ்கள் மறைந்துபோய்விட்டதாக கருதப்பட்டிருந்த நிலையில், அவை மீண்டும் தோன்றியுள்ளது ஆச்சரியமளிப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பொதுவாக இந்த புதிய கொரோனா வைரஸால் மனிதர்களைவிட mink என்னும் விலங்குகளுக்குத்தான் அபாயம்.

என்றாலும், அவைகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்றிவிடலாம் என்ற அச்சத்தால், டென்மார்க் ஏராளமான minkகளை கொன்றது குறிப்பிடத்தக்கது.

Getty Images

AFP

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்