நடிகர் அஜித் 100 கோடி ரூபாயை டெபாசிட் செய்தாரா?

Report Print Jubilee Jubilee in கிசுகிசு

பிரபல நடிகர் அஜித் குமார் தான் வீட்டில் வைத்திருந்த ரூ.100 கோடியை ஒரு வங்கியில் டெபாசிட் செய்தார் என்று ஒரு வதந்தியை கிளப்பியுள்ளனர்.

இந்திய பிரதமர் மோடி பழைய 500, 1000 ரூபாயை ஒழிக்கும் திட்டத்தை திடீரென அறிவித்தார்.

இதனால் வீட்டில் சிறிய அளவு பணம் வைத்திருப்பவர்கள் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து வருகின்றனர்.

அதே சமயம் அதிக அளவு பணத்தை பதுக்கி இருந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது குப்பை தொட்டியிலும், கால்வாயிலும் கத்தை கத்தையாக கொட்டப்பட்ட பணத்தையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் பிரபல நடிகரான அஜித் குமார் தனது வீட்டில் வைத்திருந்த ரூ.100 கோடி பணத்தை ஒரு வங்கியில் டெபாசிட் செய்ததாக வதந்தியை கிளப்பியுள்ளனர்.

அஜித்துக்கு தனது சம்பளத்தை பணமாக வாங்கும் பழக்கமில்லை. வருமான வரி பிடித்தம் போக மீதியிருப்பதை காசோலையில் வாங்கிக் கொள்வார்.

இந்த பண ஒழிப்பு திட்டன் குறித்து அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் நிலையில், இப்படி ஒரு வதந்தியை கிளப்பியுள்ளனர்.

இந்நிலையில் அஜீத் ரசிகர்கள் ஒரு புறமும், அவர்களுக்கு எதிரான கோஷ்டிகள் இன்னொரு பக்கமுமாக இணையதளத்தில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments