சிறுநீரக செயலிழப்பை தடுக்க இதை செய்திடுங்கள்

Report Print Printha in ஆரோக்கியம்
2621Shares
2621Shares
lankasrimarket.com

சிறுநீரக செயல்பாட்டை சீராக்குவதற்கு உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். அதன் அடிப்படையில் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த அன்றாடம் சில உணவுகளை பின்பற்ற வேண்டும்.

சிறுநீரகத்தை பாதுகாக்க பின்பற்ற வேண்டியவை?

  • உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ள வேண்டும் அல்லது உப்பிற்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம்.

  • பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உணவின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

  • தினசரி உணவில் பயிர் வகைகள் அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

  • பாஸ்பரஸ் நிறைந்த பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

உணவில் பொட்டாசியம் சத்துக்களின் அளவை குறைப்பது எப்படி?

காய்கறிகளில் உள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்கலாம் அல்லது காய்களை துண்டுதுண்டாக நறுக்கி, ஒரு பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து பின் அதை சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியம் அளவை குறைக்கலாம்.

டயாலிசிஸ் செய்பவர்கள் பின்பற்ற வேண்டியவை?

  • டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழப்பதால், நிறைய புரத உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  • மிகச்சிறந்த புரத உணவான பயிர்களை ஊற வைத்து முளைகட்ட வைத்து சாப்பிடலாம்.

  • தினமும் 1.4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் அதிக நீர், பழங்கள், சாம்பார், ரசம் ஆகிய உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் நம் உடலிற்கு தேவையான நீர் பூர்த்தியாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்