சிறுநீரில் திட்டு திட்டாக ரத்தம் வெளியேறிகிறதா? இதுதான் காரணம்

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்
569Shares
569Shares
lankasrimarket.com

சிறுநீர்ப்பை புற்று நோயின் தொடக்கத்தில் சில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகளை அறிந்து கொண்டு அதற்கு உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது.

சிறுநீரில் திட்டு திட்டாக ரத்தம் வெளியேறினாலோ அல்லது சிறுநீர் இளம் சிவப்பு நிறத்தில் வெளியேறினாலோ அவை சிறுநீர்ப்பை புற்று நோயின் அறிகுறிகள்.

சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுவது, சிறுநீர்ப்பை புற்று நோயின் ஒரு அறிகுறியாகும். அதோடு ஒருவித எரிச்சல் நிறைந்த வலி அல்லது அசௌகரியம் சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும்.

இயல்பை விட அதிகமாக சிறுநீர் கழிப்பது மற்றும் உடனடியாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற அடக்க முடியாத உணர்வுகளும் இந்த புற்று நோயின் அறிகுறியாகும்.

முதுகின் கீழ் பகுதியில் அல்லது அடி வயிற்று பகுதியில் தாங்க முடியாத வலியை உணரக்கூடும். இதுவும் சிறுநீர்ப்பை புற்று நோயின் தாக்கமே.

எலும்புகளில் வலி ஏற்படுவது, சோர்வு, பாதங்களில், வீக்கம் பசியின்மை மற்றும் உடல் எடை குறைவது போன்ற அறிகுறிகள் சிறுநீர்ப்பை புற்று நோயின் ஆரம்ப நிலையை குறிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்