மிளகில் ஒளிந்திருக்கும் குணாதிசயங்கள்: ஒரு மிளகு இருந்தாலே போதுமாம்

Report Print Printha in ஆரோக்கியம்

உணவுகளில் காரத்திற்காக சேர்க்கப்படுவது மட்டுமல்ல மிளகு, அதில் அரிய வகை மருத்துவ குணாதிசயங்கள் கூட நிறைந்திருக்கிறது.

மிளகில் உள்ள விட்டமின் A, C, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் நம் உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி பல நோய்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது.

அவற்றை விரிவாக தெரிந்துக் கொள்வோம் வாங்க..

மிளகின் மருத்துவ நன்மைகள்
 • ஒரே ஒரு மிளகை அன்றாடம் சமைக்கும் உணவில் சேர்த்துக் கொண்டால் உணவு சுவையாக இருக்கும்.
 • 2 மிளகை எடுத்து 2 ஆடாதோடா இலைகளை அதனுடன் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் இருமல், சளி காணாமல் போகும்.
 • நான்கு மிளகுடன் சுக்கை சிறிது கலந்து சாப்பிட்டால் நெஞ்சுவலி விரைவில் மறையும்.
 • ஐந்து மிளகு மற்றும் சுக்கும், திப்பிலி ஆகிய அனைத்தையும் கலந்து சாப்பிட்டால் கோழை ஓடியே போகும்.
 • 6 மிளகை எடுத்து அதனுடன் சோம்பையும் சேர்த்து இடித்து சாப்பிட்டு வர மூலநோய் தானே மறையும்.
 • 7 மிளகை பொடி செய்து நெய் கலந்து அதில் சாதத்தை கலந்து பிசைந்து உண்டால் நல்ல பசி எடுக்கும். தொண்டைக்கட்டும் விட்டுப் போகும்.
 • எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக் கொண்டால் வாந்தி பிரச்சனை வரவே வராது.
 • 9 மிளகும், துளசியும் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் அலர்ஜி எனும் ஒவ்வாமை பிரச்சனை குணமாகும்.
 • 6-7 மிளகை வாயில் போட்டு கடித்து மென்று சாப்பிட்டு வந்தால், நம் உடலில் எவ்வித நோயின் பாதிப்புகளும் வராது.
 • மிளகின் புற அமைப்பு கொழுப்பு செல்களை சிதைக்கிறது. இதனால் உடல் பருமனாவதை தடுத்து, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது.
 • கருப்பு மிளகு மலச்சிக்கலால் ஏற்படும் வயிற்று வலியை குறைக்கிறது. அதனால் உணவில் மிள்காய்ப்பொடிக்கு பதிலாக மிளகுப்பொடியை பயன்படுத்தலாம்.
 • கருப்பு மிளகை நன்றாக பொடி செய்து அதை ஒரு கப் தயிருடன் கலந்து தலையில் நன்றாக தடவி, அரை மணிநேரம் கழித்து வெறும் முடியை அலச வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்