வலிப்பு நோயை சரி செய்ய வேண்டுமா? இதோ பாட்டி வைத்தியம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

வலிப்பு நோய் வந்துவிட்டால் நம் மனதில் பெரும் பயம் எழுந்து விடுகின்றது. வலிப்பு நோயென்பது சிலவேளைகளில் உயிரையும் பறிக்கக் கூடிய ஆபத்தான ஒரு நோயாகும்.

வலிப்பு நோய் என்பது நம்முடைய உடலின் நரம்பு செல்கள் மற்றும் அதில் உள்ள தேவையற்ற மின்னணுக்கள் மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணுக்கள் உற்பத்தி செய்து வெளியிடுகிற பொழுது, அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நம்முடைய உடலில் ஏற்படுகின்ற மாற்றமே ஆகும்.

இந்த வலிப்பு நோய்க்கு காக்காய் வலிப்பு, ஜன்னி, பிட்ஸ் (fits), எபிலெப்ஸி (epilepsy) என்று பல்வேறு பெயர்கள் உண்டு.

வலிப்பு நோய் தீர்ப்பதற்கு நம்முடைய வீடுகளில் உள்ள சின்ன சின்ன சமையல் அறை பொருள்களை கொண்டு தீர்க்க முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • வெள்ளை வெங்காயத்தை நன்கு கைகளால் இடித்து சாறெடுத்து வலிப்பு வருபவர்களின் காதுகளில் 3 அல்லது 4 சொட்டுக்கள் அளவில் அடிக்கடி விட்டு வந்தால், வலிப்பு வேகமாக அடங்கும்.
  • மாங்கொட்டைக்குள் இருக்கும் வெள்ளை நிற விதையை எடுத்து நன்கு வேகவைக்க வேண்டும். நன்கு வெந்தபின் எடுத்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலநோய்கள், காக்காய் வலிப்பு மற்றும் வெயில் காலங்களில் ஏற்படுகின்ற சூட்டுப் பிரச்சினைகளும் கூட தீரும்.
  • முருங்கை மரத்தினுடைய பட்டையை எடுத்து நீர்விட்டு அரைத்து அதை வடிகட்டி சாறெடுத்து ரசமாக மாற்றிக் கொண்டு, அதை அரிசி சாதத்துடன் சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் குளிர்க் காய்ச்சல், வலிப்பு நோய் ஆகியவை வேகமாகத் தீரும்.
  • இரண்டு கிராம் அளவுக்கு பொரித்த பெருங்காயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்துக் கலந்து சாப்பிட்டு வந்தால் வலிப்பு ஏற்படுவதற்கு என்னவெல்லாம் காரணமாக இருக்கிறதோ அதையெல்லாம் சரிசெய்யலாம்.
  • திராட்சைப் பழம் வலிப்பு நோய்க்கு மிக நல்ல குணத்தைக் கொடுக்கும். திராட்சைப் பழத்தைப் பிழிந்து சாறெடுத்து அதை இரண்டு தேக்கரண்டி வீதம் தினமும் மூன்று வேளையும் சாப்பிட வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்