உடல் எடையில் அவதிப்படுபவர்களுள் நீங்களும் ஒருவரா? அப்போ ஒரு டம்ளர் இந்த அற்புத ஜூஸை குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக ஆண்களுக்கு சரி பெண்களுக்கு நாளுக்கு நாள் உடல் எடை அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதனால் பலரும் பெரும் கஷ்டப்படுவதுண்டு.

இதற்காக பலரும் கண்ட கண்ட மாத்திரைளை வாங்கி உபயோகிப்பதுண்டு. இருப்பினும் இது நாளடைவில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

இதற்கு நாம் இயற்கை முறையில் கிடைக்கும் பலன்களை கொண்டு உடல் எடையினை எளிதில் குறைக்க முடியும்.

அந்தவகையில் அதற்கு அத்திப்பழம் சிறந்த பொருளாக கருதப்படுகின்றது. அத்திப்பழத்தில் தயாரிக்கப்படும் ஜூஸில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது. இது உடல் எடை குறைப்புக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.

தற்போது அத்திப்பழத்தினை வைத்து தயாரிக்கப்படும் ஜூஸை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானவை
  • அத்திப்பழம் - கால் கிலோ
  • பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
  • இஞ்சி - 1 துண்டு
  • தேன் - 1 டீஸ்பூன்
  • பால் - 1 கப்
செய்முறை

முதலில் அத்திப்பழத்தை சுத்தம் செய்து கொள்ளவும்.

பின்னர் மிக்சியில் அத்திப்பழத்தை போட்டு அதனுடன் பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை, இஞ்சி, தேன், பால் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த ஜூஸை ஒரு டம்ளரில் ஊற்றி பருகலாம். தேவைப்பட்டால் ஐஸ் கட்டி போட்டு பருகவும் .தினமும் இதனை குடித்த வந்தால் நாளடைவில் நல்ல மாற்றத்தை காணலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்