30 நாட்களில் இரத்த சர்க்கரையின் அளவை சீராக்க இந்த உணவுகள் மட்டும் போதுமே!

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்று பெரும்பாலும் மக்களில் உயிரை எளிதில் பறிக்கும் நோய்களில் ஒன்று தான் சக்கரை வியாதி.

இதற்கு பரம்பரை மட்டுமின்றி உணவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றமும் முக்கிய காரணமாகும்.

இதிலிருந்து எளிதில் விடுபட மருந்துகள் என்னதான் உதவி செய்தாலும் உணவுகளை கட்டுபாடுடன் சாப்பிடுவது அவசியமாகும்.

அந்தவகையில் சில உணவுப் பொருட்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், 30 நாட்களில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு, இன்சுலின் அளவையும் சீராகப் பராமரிக்கலாம்.

தற்போது அந்த உணவுகள் என்ன என்பதை பார்ப்போம்.

  • கரட்டினை தினமும் தவறாமல் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள பீட்டா கரோட்டீன் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, இன்சுலினை சீராக சுரக்க உதவும்.
  • வாரம் 2 முறை உணவில் மீன் சேர்த்து வருவது, சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனெனில் இது இன்சுலினை சீராக சுரக்க உதவும்.
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆலிவ் ஆயிலை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலம், அதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் இன்சுலின் சுரப்பை சீராக்கி, நீரிழிவின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.
  • தானியங்களால் செய்யப்படும் பிரட்டை உணவில் சேர்த்து வந்தால், செரிமானம் மெதுவாக நடைபெறுவதோடு, கலோரிகளும் குறைவாக இருப்பதால், உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
  • தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.
  • சர்க்கரை நோயாளிகள் அன்றாடம் சிறிது பாதாமை உட்கொண்டு வருவது நல்லது. . ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன், அவர்களின் இரத்த சர்க்கரையின் அளவை குறைத்து, இன்சுலின் அளவை சீராகப் பராமரிக்க உதவும்.
  • தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் க்ரீன் டீ குடிக்கும் பழக்கத்தைக் கொண்டால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
  • தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு, இரத்த சர்க்கரையில் உள்ள ஏற்றத்தாழ்வையும் குறைக்கலாம்.
  • சர்க்கரை நோயாளிகள் ஓட்ஸை காலை உணவாக எடுத்து வருவது நல்லது. ஏனெனில் இதில் உள்ள கார்போடிஹைட்ரேட்டை மெதுவாக உறிஞ்சி இரத்த சர்க்கரையாக மாற்றும். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஒரே நேரத்தில் அதிகரிப்பது தடுக்கப்படும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers