இது தெரிந்தால் இனி தர்பூசணி விதைகளை தூக்கி வீச மாட்டீங்க...பல அற்புத நன்மைகளை வழங்குமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

தர்பூசணி விதைகள் நமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

தர்பூசணி விதைகளை வறுத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரைக் குடித்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

தர்பூசணி விதைகளில் கலோரிகள் மிக மிகக் குறைவு. அதேசமயம் உடலுக்குத் தேவையான காப்பர், ஸிங்க், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற மினரல் சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் உள்ளன.

அந்தவகையில் நாம் வேண்டாம் என தூக்கி ஏறியும் தர்ப்பூசணி விதை சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
  • மெக்னீசியம் அதிக அளவில் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இது நேரடியாக இதயத்தோடு தொடர்பு கொண்டது என்பதால் இதய ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
  • ஒட்டுமொத்த மினரல் சத்துக்களின் ஆற்றல் எலும்புகளையும் பலப்படுத்துகிறது. மேலும் உடலின் வளர்ச்சிதை மாற்றங்களையும் சீராக்குகிறது.
  • தர்பூசணி சாப்பிட்டதும் அது வெளியிடும் ஆசிட் உடலின் செயல்பாடுகளை சீராக்கும்.
  • நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
  • தர்பூசணி உடல் நலத்தை பாதுகாப்பது மட்டுமன்றி சருமத்தை பாதுகாக்கவும் உதவும்.
  • தலைமுடி ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். தர்பூசணி விதை எண்ணெய் விற்கப்படுகிறது. அதை சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்யலாம். அதை தலையின் வேர்களில் தேய்த்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்