சளி, இருமலில் இருந்து விடுபடனுமா? இதோ சில அட்டகாசமான வைத்தியங்கள்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக பருவநிலை மாற்றத்தால் அடிக்கடி பலருக்கு சளி, இருமல் போன்றவை அடிக்கடி ஏற்படுவதுண்டு.

இதனை போக்க பலரும் மருத்துவமனைகளே தஞ்சம் என்று அடிக்கடி செல்லுவதுண்டு. இருப்பினும் இதற்கு தொடர்ந்து மருந்துகள் எடுப்பதும் பக்கவிளைவுகளே ஏற்படுத்தும்.

இதற்கு வீட்டில் இருந்தப்படியே சில கைவைத்தியங்களை கூட செய்து பலன் பெறலாம்.

அந்தவகையில் தற்போது சளி, இருமல் பிரச்சனையில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட இயற்கையான வழிமுறைகள் என்னவென்று இங்கே பார்க்கலாம்.

  • நன்கு பழுத்த கொய்யாப்பழத்தை துண்டுகளாக்கி, மிளகுத் தூள் தொட்டு சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடும் போது, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் தொல்லையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
  • அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதை சிறிது மிளகுத் தூள் சேர்த்து கலந்து தினமும் குடித்து வர, சளி, இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, உடல் சோர்வும் நீங்கும்.
  • கற்பூரவள்ளி இலை துண்டுகளாக்கி நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரைக் நாள் முழுவதும் அவ்வப்போது குடித்து வர, சீக்கிரம் சளி பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • வெங்காயத்தை நெருப்பில் சுட்டு சாப்பிடுவதனால், இருமல் மற்றும் சளி தொல்லைகளில் இருந்து விடுபடலாம். அதிலும் சின்ன வெங்காயத்தை தான் சுட்டு சாப்பிட வேண்டும். ஏனெனில் அது தான் சளி, இருமல் பிரச்சனைக்கு உடனடி தீர்வை வழங்கும்.
  • வெற்றிலை அற்புதமான மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஒரு மூலிகை இலை. இந்த வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றில் தேன் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், இருமல் பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
  • ஆரஞ்சு பழத்தை ஜூஸ் எடுத்து, அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடிப்பதால், சளி, இருமல் பிரச்சனை குணமாவதோடு, தொண்டை வலியில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
  • மாட்டுப்பாலை நன்கு காய்ச்சி, அதில் சிறிது தேன் கலந்து குடிப்பார்கள். இதனால் சளி, இருமல் தொல்லையில் இருந்து விரைவில் விடுபட உதவும்.
  • ஒம விதைகளை நீரில் போட்டு, அத்துடன் சிறிது துளசி இலைகளையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரை ஒரு நாளைக்கு இரண்டு வேளை குடித்து வந்தால், இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். முக்கியமாக இந்த வைத்தியம் நெஞ்சு சளியை வெளியேற்ற உதவியாக இருக்கும்.
  • சளி, இருமல் பிடித்திருக்கும் போது, வெதுவெதுப்பான மாட்டுப் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து, இரவு தூங்கும் போது குடித்தால், இருமல், தொண்டை கரகரப்பு, மூக்கு ஒழுகல் போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • இஞ்சியை சாறு எடுத்து, அதில் தேன் சேர்த்து கலந்து சாப்பிடுவதன் மூலம், நெஞ்சு பகுதியில் உள்ள சளி முற்றிலும் வெளியேறி, விரைவில் இருமல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்