மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களித்தால் என்னவாகும்! பட்டியலிடும் சங்கரய்யா

Report Print Arbin Arbin in இந்தியா
மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களித்தால் என்னவாகும்! பட்டியலிடும் சங்கரய்யா

மக்கள் நலக் கூட்டணியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான தோழர் சங்கரய்யா, மக்கள் நலக் கூட்டணியின் ஆட்சி எப்படி இருக்கும் என்பது குறித்து பட்டியலிட்டுள்ளார்.

அதில், " சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாக உருவெடுத்தோம். இதன்பின்னர், விஜயகாந்த் எடுத்த முடிவின்படி ஆறுகட்சி கூட்டணியாக உருமாறினோம்.

தொடக்கத்தில் மதவாத, வகுப்புவாத சக்திகள் விஜயகாந்த்தை இழுக்க முயற்சி செய்தன. அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததன் மூலம் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு காலூன்ற இடமில்லாமல் போய்விட்டது.

கருணாநிதியிடம் சேரவும் அவர் மறுத்துவிட்டார். எங்கள் அணியில் தே.மு.தி.கவும், த.மா.காவும் இணைந்தன் மூலம் ஆறுகட்சி கூட்டணியாக மும்முரமான பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.

அ.தி.மு.க மற்றும் தி.மு.கவின் முக்கிய நோக்கமே பெருமுதலாளிகளைக் காப்பாற்றுவதுதான். அவர்களின் கொள்கையும் இந்திய முதலாளிகளின் நலன்களுக்குக்காகத்தான் இருக்கிறது. அவர்களுடைய ஆட்சியில் ஊழலும் சர்வாதிகாரமும் தலைவிரித்தாடுகின்றன.

இது குறித்தெல்லாம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம். எங்களுடைய ஆறு கட்சிகளின் கூட்டணியானது, விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், பாடுபடும் நடுத்தர தொழிலாளர்கள் என உழைப்பவர்களுக்கு நன்மை தரக் கூடிய ஆட்சியை உருவாக்கும்.

இப்போது வரையில் தனிநபர்கள் முடிவு செய்யும் ஆட்சிதான் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாங்கள் உண்மையான கூட்டணி ஆட்சியை அமைப்போம்.

ஒரு கட்சி தவறு செய்தாலும், இன்னொரு கட்சி அதை சுட்டிக் காட்டும். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையானது மக்களின் கோரிக்கைகளை முழங்கும் மன்றமாக மாறும்.

சட்டமன்றக் காட்சிகள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்பதையும் அறிக்கையில் கூறியிருக்கிறோம். ஒளிவுமறைவற்ற வகையில் சட்டமன்றத்தை நடத்தும்போது, மக்களுக்கு அனைத்து விஷயங்களும் தெரியும்.

சட்டமன்றத் தேர்தல் மூலம் புதிய வாழ்க்கையை உருவாக்கித் தர போராடிக் கொண்டிருக்கிறோம். புதிய ஜனநாயக, முற்போக்கான மாற்று சக்தி ஆட்சியமைக்க மக்கள் உதவ வேண்டும்” என்கிறார் தோழர். சங்கரய்யா.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments