சினிமா பாணியில் பெண் தொழிலதிபர் கடத்தல்: ரூ.20 கோடி கேட்டு சித்ரவதை

Report Print Jubilee Jubilee in இந்தியா

நாமக்கல் மாவட்டத்தில் பெண் தொழிலதிபர் ஒருவர் மர்ம நபர்களால் சினிமா பாணியில் கடத்தப்பட்டு கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் சர்மிளா பானு. தொழிலதிபரான அவரை மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றது. இதற்கு அவரின் கார் டிரைவரும் உடந்தையாக இருந்துள்ளார்.

காரில் கடத்தப்பட்ட சர்மிளா பானுவிடம் இருந்து 15 சவரன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை பறித்துக் கொண்டது அந்த மர்ம கும்பல். மேலும், அவருக்கு மயக்க ஊசிபோட்டு சித்ரவதை செய்து நள்ளிரவில் நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றனர்.

இது தவிர, ரூ.20 கோடி தரவேண்டும் என்றும், இல்லாவிட்டால் மகனையும் கடத்துவோம் என அந்த கும்பல் மிரட்டியுள்ளது.

இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேர் தலைமறைவானார்கள். இதற்கு உடந்தையாக இருந்த சர்மிளா பானுவின் கார் டிரைவரும் தலைமறைவானார். இந்த கும்பலை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments