காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஒசூரில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒசூர் அருகே உள்ள புக்சாகரம் கிராமத்தை சேர்ந்த சந்திரா என்பவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் இளம்நிலை 3 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இவரும், பெங்களூரில் பணியாற்றி வரும் வினய்குமார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர், இந்த காதல் விவகாரம் சந்திராவின் வீட்டிற்கு தெரியவந்தையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு மட்டுமல்லாமல், சந்திராவிற்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனை அறிந்து, தனது பெற்றோர்களுடன் சந்திராவின் வீட்டிற்கு பெண்கேட்டு சென்ற வினய்குமாரை, உதாசீனப்படுத்தியோடு மட்டுமல்லாமல், அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, வினய்குமார் நாம் எங்காவது ஓடிச்சென்று திருமணம் செய்துகொள்வோம், நீ இல்லாமல் என்னால் வாழ இயலாது, நான் தற்கொலை செய்துகொள்வேன் என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இதனை படித்த சந்திரா, மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது, குறுஞ்செய்தி மூலம் சந்திராவை தற்கொலைக்கு தூண்டியதாக வினய்குமார் மீது வழக்குபதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments