பிறக்கும் ஒவ்வொரு குழந்தை மீதும் 40 ஆயிரம் ரூபாய் கடன்!

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தை மீதும் 40 ஆயிரம் ரூபாய் கடன் சுமை உள்ளதாக சட்டப்பேரவையில், திமுக எம்.எல்.ஏ துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை மீதான 4-ம் நாள் பொதுவிவாதத்தில், பேசிய திமுக எம்.எல்.ஏ., துரைமுருகன். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாக கூறினார். இதன் மூலம் அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் பிறக்கும் குழந்தையின் மீதான கடன் 15 ஆயிரம் ரூபாயாக இருந்ததாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தெரிவித்ததை நினைவுகூர்ந்த துரைமுருகன்,

தற்போது பிறக்கும் குழந்தையின் மீதான கடன் 40 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துவிட்டதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதற்கான நீண்ட விளக்கத்தை நிதியமைச்சரின் பதிலுரையாக நாளை தருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments