காவிரி கலவரத்தில் பெங்களூரில் கேபிஎன் பஸ்களை தீயிட்டு கொளுத்திய சம்பவத்திற்கு காரணமாக பெண்ணை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடந்த 12ம் திகதி காவிரி விவகாரம் தொடர்பாக பெங்களூரில் நடைபெற்ற வன்முறையில் பெங்களூர் டிசோசா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 42 பஸ்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக 7 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கலவர பின்னணியில் ஒரு பெண் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போட்டுப் பார்த்த பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் ஒரு பெண் பெட்ரோல், டீசல் போன்றவற்றை சப்ளை செய்து பஸ்களை கொளுத்த உதவியுள்ளார்.
இதனையடுத்து அந்த ஏரியாவில் பொலிசார் தீவிர விசாரணை நடத்திய போது அருகேயுள்ள யசோதா நகர் பகுதியை சேர்ந்த பாக்யஸ்ரீ என்ற 22 வயது பெண்தான், கலவரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பாக்யஸ்ரீ என அந்த பெண் வட கர்நாடகாவின் யாதகிரி மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 2 வருடங்கள் முன்பு தனது தாய், தந்தையோடு பிழைப்பு தேடி பெங்களூர் வந்துள்ளார்.
சம்பவத்தன்று, டிவியில் தமிழகத்துக்கு எதிராக போராட்டம் நடைபெறும் செய்தியை பார்த்து கன்னட கொடியை பிடித்து வரும் வாலிபர்களை தமிழகத்தை சேர்ந்த கேபிஎன் நிறுவன பஸ்களை கொளுத்த தூண்டியதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
பாக்யஸ்ரீ மீது கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகளில் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.