பரபரப்பு: கர்நாடக வாகனங்கள் தமிழகத்தில் நுழைய தடை?

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து தமிழர்களுக்கு எதிராகவும், தமிழக வாகனங்களுக்கு எதிராகவும் பல்வேறு தாக்குதல்கள் ஒரு மாதத்துக்கு முன்னர் கர்நாடகாவில் நடந்தது. இந்த பெரும் பிரச்சனையால் இரு மாநிலங்களுக்கும் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

பின்னர் பதற்றமான சூழ்நிலை தணிந்ததை அடுத்து இன்று இரு மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து தொடங்கியது. கர்நாடாகவுக்குள் தமிழக எண் கொண்ட வாகனங்கள் வர தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் கர்நாடக பேருந்துகள் தமிழக பகுதியான சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த பேருந்துகளை தடுத்து நிறுத்திய பொலிஸ் அதிகாரிகள், காவிரி பிரச்சனையில் இன்னும் நல்ல முடிவு எட்டபடவில்லை, அதனால் திரும்பி போய் விடுங்கள் என அந்த பேருந்துகளை கர்நாடகாவுக்கே திருப்பி அனுப்பி வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments