ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு: வங்கி வாசலில் இது தேவையா

Report Print Deepthi Deepthi in இந்தியா
322Shares

500 ரூபாய் நோட்டுகளை மாற்ற சென்ற போது வங்கி வாசலில் வைத்து இரு இளசுகளுக்கு காதல் துளிர்விட்டுள்ளது.

மோடியின் அதிரடி அறிவிப்பால் இந்திய மக்களே ஸ்தம்பித்துபோயுள்ளனர். பணத்திற்காக காலை முதல் மாலை வரை கால்கடுக்க வங்கியில் காத்திருந்தும், உணவினையும் பொருட்படுத்தாமலும் தவித்து வருகின்றனர்.

வங்கி வாசலில் பல மணி நேரம் காத்திருப்பதால், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடல்நலப்பிரச்சனைகளால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

இப்படி வங்கி வாசல் முன்பு மக்கள் அனைவரும் ரணகளமாக நின்றுகொண்டிருக்க, இரு இளசுகளுக்கு கிலுகிலுப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கியில் பணம் எடுக்க தனது ஸ்கூட்டியில் வந்தால் குமுதினி. அங்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த அவள் மீது தனது காதல் பார்வைகளை தொடுத்தான் குமுதன்.

சுமார் 4 மணிநேரம் இருவரும் கண்களாலயே பேசிக்கொண்டனர். இடையில் குமுதினிக்கு தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. இதுதான் சான்ஸ் என்று, சிட்டாக பறந்துசென்ற குமுதன் ஒரு மினரல் வாட்டல் பாட்டிலை வாங்கி வந்துகொடுத்துள்ளான்.

தாகம் தீர்த்த குமுதினி, அப்போதும் வாய்திறக்காமல் தனது கண்களாலேயே நன்றி தெரிவித்தாள்.

இப்படியே அந்த நாள் முழுவதும் ஓடிவிட்டது. அடுத்த நாள் இருவரும் வங்கிக்கு வந்துள்ளனர். முதல் நாள் தண்ணீரில் அடுத்த நான் ஒருபடி மேல்போய் மதிய உணவு.

ருசியான உணவினை வாங்கிகொடுத்து குமுதினியின் வயிற்றை நிரப்பியதோடு மட்டுமல்லாமல் அவளது மனதினையும் குளிரச்செய்துள்ளான். இருவரும் சேர்ந்து ஒன்றாக சாப்பிட்டுள்ளனர்.

அப்போதுதான், ஒருவரையொருவர் நன்றாக அறிமுகப்படுத்திக்கொண்டனர். இரண்டாம் நாளும் இவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. ஆனால் பணம் கிடைக்கவில்லையே என்ற கவலையை விட, அடுத்த நாளும் நாங்கள் சந்தித்துக்கொள்ளாலாம் என்ற சந்தோஷத்தில் இரு சிட்டுகளும் வீட்டுக்கு பறந்து சென்றன.

மூன்றாம் நாள் வந்தது, இவர்களது கைக்கு பணமும் வந்தது, காதலும் கைகூடியது. குமுதன் அவளின் கைப்பேசி இலக்கங்களை வாங்கியுள்ளான்.

அன்று இரவு இருவரும் கைப்பேசியில் பேச ஆரம்பித்தனர், தற்போது காதல் பறவைகளாக சுற்றி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments