பெண்களின் உடல் என்றாலே ஆபாசம் தானா! விளாசி வாங்கிய இளம்பெண்

Report Print Jubilee Jubilee in இந்தியா

பெண்ணின் உள்ளாடை அடங்கிய ஒரு கட்டுரைக்கு பேஸ்புக்கில் தடைவிதிக்கப்பட்டதால் அந்த கட்டுரையை பதிவேற்றிய இளம்பெண் பேஸ்புக் நிறுவனத்தை விளாசி வாங்கியுள்ளார்.

Japleen Pasricha என்பவர் feminism in india நிறுவனர். இவர் கடந்த 7ம் திகதி “I Was Ashamed Of My Breasts”: On Bras And Breasts என்ற பெயரில் ஒரு கட்டுரையை பேஸ்புக்கில் பதிவேற்றினார்.

அதில், ஆபாசமான படம் இடம்பெற்றதாக பேஸ்புக் அந்த கட்டுரையை ஷேர் செய்ய தடைவிதித்தது. இந்த பதிவு ஆபாசமாக இருப்பதாக தணிக்கை நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் Japleen தனது பேஸ்புக் பக்கத்தில், ஆபாசம் மீதான தடையை அறிந்து கொள்ள முடிகிறதா? பெண்கள் உடல் என்றாலே ஆபாசம் என்று தான் பேஸ்புக் நினைக்கின்றது. இதன் மூலம் பெண்களின் உடலை பார்த்து இன்பமடைபவர்கள் ஆண்கள் என்று நன்றாக தெரிகிறது என்று பதிவேற்றினார்.

இதைத் தொடர்ந்து இந்த பிரச்சனைக்கு பேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், பல்வேறு வேறுபாடுகள் நிறைந்த இந்த சமூகத்தில் ஒருவர் தன்னை எப்போதும் சமநிலையில் வெளிப்படுத்துவது எப்போதும் எளிதான விடயம் இல்லை. நாங்கள் எங்களால் முடிந்ததை செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments