அமெரிக்க பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! தொடர் சம்பவங்களால் அதிரும் தலைநகரம்

Report Print Jubilee Jubilee in இந்தியா

டெல்லியில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த வருடம் தொடக்கத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தார்.

அவர் தலைநகர் டெல்லியில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார். அப்போது ஒரு மர்ம கும்பல் அவரை இரண்டு நாட்கள் அறையில் அடைத்து வைத்து சீரழித்தது.

மேலும், இதுகுறித்து வெளியில் கூறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி விட்டுச் சென்றது.

ஆனால் அந்த பெண் இது குறித்து பொலிசில் புகார் அளித்துவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார்.

பல மாதங்கள் கடந்தும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை முடுக்கி விடவில்லை.

இதனால் விரக்தி அடைந்த அந்த பெண்மணி, சில நாட்களுக்கு முன் டெல்லி வந்து ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் தன்னுடைய புகாரை மீண்டும் தெரிவித்தார்.

இந்நிலையில் நான்கு பேரை கைது செய்துள்ளதாக டெல்லி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுற்றுலா வழிகாட்டி, டிரைவர், கிளீனர், ஹொட்டல் ஊழியர் ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய தலைநகர் டெல்லியில் நடக்கும் இது போன்ற தொடர் சம்பவங்கள் சுற்றுலா பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments