சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகை? திடீர் பொலிஸ் குவிப்பால் பரபரப்பு!

Report Print Arbin Arbin in இந்தியா

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு திடீரென்று பொலிஸ் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதலமைச்சராக பதவியேற்கப்படலாம் என்ற தகவல் வெளியான நிலையில், ஆளுநர் வித்யா சாகர் ராவ் தமிழகம் வராமல் மும்பை சென்றதால் பதவியேற்பு விழா நடைபெறாது என்ற சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை அதிமுகவினர் முற்றுகையிடப்படலாம் என கிடைத்த தகவலை தொடர்ந்து ராஜ்பவன் முன் தடுப்பு வேலி அமைத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சசிகலா பதவியேற்பு விழா நடைப்பெறுவதாக இருந்த சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த பொலிஸ் கூடுதல் பாதுகாப்பு குறைக்கப்பட்டு, ராஜ்பவனுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments