ஜெயலலிதாவுடன் நடித்த பெண்: கோவிலில் பிச்சை எடுக்கும் அவலம்

Report Print Santhan in இந்தியா

பிரபல நடிகர் சிவாஜிகணேசன் மற்றும் நடிகை ஜெயலலிதா ஆகியோர் நடித்த படங்களில் குரூப் டான்ஸராக நடனமாடிய ஜமுனா தற்போது கோவிலில் பிச்சை எடுத்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சுந்தரம்பிள்ளை, சி சரஸ்வதி சபதம், அவ்வையார் உள்பட பல படங்களுக்கு குரூப் டான்சராக இருந்தவர் ஜமுனா. தற்போது அவருக்கு வயது 80 ஆகிறது.

அவருடைய கணவர் ஒரு மேக்அப் மேன்.

இந்நிலையில் அவர் தன்னுடைய நிலைமையை பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ஒரு காலத்தில் நாங்கள் வசதியாக இருந்தோம்.

சென்னையில் சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தோம். ஆனால் வயது அதிகமாக, அதிகமாக தங்களால் வருமானம் ஈட்ட முடியவில்லை. இதனால் தாங்கள் எதற்கும் பயன்படாதவர்கள் என்று உறவினர்களும் தங்களை ஒதுக்கிவிட்டனர்.

ஒதுக்கப்பட்ட காலக்கட்டத்தில் பல வேலைகளை செய்தேன். தற்போது தன்னுடைய உடல் நிலை சரியில்லாததால், தன்னால் வேலைக்கு செல்லமுடியவில்லை, இதனால் பிறரிடம் கையேந்தி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது என்று வருத்ததுடன் கூறியுள்ளார்.

விஷால் பல நடிகர்களுக்கு உதவி செய்துள்ளார் என்று கேள்விப்பட்டுள்ளேன். அவர் எனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது ஜமுனா சென்னையில் உள்ள வடபழனி கோவில் அருகே பிச்சை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments