தொண்டை வழியாக குழாயை விட்டோம்! கருணாநிதியை நினைத்து கண்ணீருடன் துரைமுருகன்

Report Print Santhan in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ஆம் திகதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை தேறிய அவர் டிசம்பர் 7-ஆம் திகதி வீடு திரும்பினார்.

சிறிது நாள்களில் மீண்டும் நுரையீரல் மற்றும் தொண்டையில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக மூச்சுவிட சிரமப்பட்டார்.

இதனால் உடனடியாக அதே காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வீடு திரும்பிய அவர் ஓய்வெடுத்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து துரைமுருகன் உருக்கமான பதிவு ஒன்றை தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments