20 ஆண்டுகளாக தனது குடும்பத்தினரால் இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்ட பெண்

Report Print Deepthi Deepthi in இந்தியா
623Shares
623Shares
lankasrimarket.com

கோவாவில் பெண் ஒருவரை அவரது குடும்பத்தினரே கடந்த 20 வருடங்களாக அறையில் அடைத்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கடந்த 20 வருடங்களாக இருட்டு மட்டுமே அவரது வாழ்க்கையாக இருந்துள்ளது.

கோவாவை சேர்ந்த இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் மும்பையை சேர்ந்த நபரை திருமணம் செய்துகொண்டு மும்பைக்கு குடியேறினார்.

ஆனால், அந்த நபருக்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது என்பதை அறிந்து மீண்டும் கோவாவுக்கு திரும்பியுள்ளார்.

வீடு திரும்பிய இவரின் நடவடிக்கைகள் புதுவிதமாக இருந்துள்ளது, இதனால் இவரை இவரது குடும்பத்தினர் ஒரு அறையில் அடைத்து வைத்து ஜன்னலின் வழியாக உணவுகளை மட்டும் வழங்கி வந்துள்ளனர்.

இவருக்கு இரு அண்ணன்கள் உள்ளனர், இந்நிலையில் இவர் பொலிசாரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார்.

இவர் மீட்கப்பட்டபோது நிர்வாண நிலையில் இருந்துள்ளார், மேலும் துர்நாற்றம் வீசியுள்ளது.

தனது திருமண வாழ்க்கைவில் ஏற்பட்ட இழப்பால் மனநலம் பாதிக்கப்பட்டதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தற்போது முதல்கட்ட விசாரணை மட்டுமே நடைபெற்று வருகிறது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments