கர்நாடகாவின் கூர்க் ரிசார்டில் தங்கியுள்ள எம்எல்ஏ-க்களை பொலிசார் மிரட்டுவதாக டிடிவி தினகரன் குற்றம்சுமத்தியுள்ளார்.
சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த போதே இதனை குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில், பொய் வழக்கு போடுவோம் என எம்எல்ஏ-க்களை மிரட்டுகின்றனர், அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
தற்போதைய ஆட்சி முடியப்போகிறது என ஓபிஎஸ்க்கும், ஈபிஎஸ்க்கும் நன்கு தெரியும், கட்சியை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்