மகனுக்காக உதவி கேட்கும் பெண் காவலர்: டி.ஜி.பியிடம் கொடுத்த உருக்கமான மனு

Report Print Santhan in இந்தியா
241Shares
241Shares
lankasrimarket.com

தமிழகத்தில் மகளிற்கு சிகிச்சையளிக்க அரசிடமிருந்து உதவி தொகை பெற ஏற்பாடு செய்யுமாறு, பெண் பொலிஸ் ஒருவர் டி.ஜி.பியிடம் மனு கொடுத்துள்ளார்.

சேலம் மாநகர ஆயுதப்படையில் பணியாற்றுபவர் சுதா. இவரது மகள் மஞ்சள் காமாலை நோயால், பாதிக்கப்பட்டதால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அப்போது அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததால், சிகிச்சை அளிப்பதற்கு 17 லட்சம் ரூபாய் வரை செல்வாகும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவ்வளவு பெரிய தொகை, சுதாவிடம் இல்லாததால், அவர் மற்றவர்களிடம் உதவியை நாடியுள்ளார். அதுமட்டுமின்றி அரசிடம் இருந்து உதவியை பெற முயற்சித்துள்ளார்.

இதற்காக அவர், பொலிஸ் டி.ஜி.பியிடம் உருக்கமாக மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தன்னுடைய மகனுக்கு மஞ்சல் காமலை நோய் இருப்பதாகவும், கடந்த நான்கு தினங்களாக சிகிச்சை அளித்தும் எந்த ஒரு முன்னேற்றம் இல்லை, இதனால் அறுவை சிகிச்சை செய்ய எவ்வுளவு பணம் தேவைப்படும் என்பதை அதில் தெரிவித்துள்ளதால், அரசிடமிருந்து உதவி தொகையை பெற ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்