லண்டனில் வேலை பார்த்த பெண் இந்தியாவில் பிச்சையெடுக்கும் அவலம்!

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பிச்சைக்காரர்களில் இரண்டு பெண்களில் ஒருவர் அமெரிக்காவின் கிரீன் கார்டு ஹோல்டர் என்றும் மற்றொருவர் லண்டனில் வேலைபார்த்து வந்தவர் என்று பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் அமெரிக்க குழுவுக்கு ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா தலைமை வகிக்க உள்ளார்.

சுமார் மூன்று நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டினால், ஹைதராபாத்தில் இருக்கும் பிச்சைக்காரர்கள் அனைவரும் மறுவாழ்வு மையத்தியற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதுமட்டுமின்றி ஹைதராபாத்தில் பிச்சை எடுப்பதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இரண்டு மாதங்கள் வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 133 பெண் பிச்சைக்காரர்கள் Cherlapalli-ல் இருக்கும் Ananda ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்களை Cherlapalli சிறை கண்காணிப்பாளர் K Arjun Rao விசாரித்த போது சில நம்பமுடியாத தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து Arjun Rao ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளிக்கையில், இங்கு இருக்கும் பெண்களிடம் விசாரணை மேற்கொண்ட போது இரண்டு பெண்கள் எங்களையே மிஞ்சும் அளவிற்கு ஆங்கிலத்தில் பேசினர், அதுமட்டுமின்றி கேட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்திலே அசால்ட்டாக பதில் அளித்தனர்.

அதன் பின் அவர்களை விசாரணை மேற்கொண்ட போது அந்த பெண்ணின் பெயர் Farzona(50), முதுகலை பட்டம் பெற்றுள்ளது தெரியவந்தது.

லண்டனில் உள்ள தனியார் கம்பெனியில் அக்கவுண்ட் டிபார்ட்மெண்ட்டில் வேலை பார்த்து வந்தவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார்.

இவரின் மகன் அமெரிக்காவிலும், இவருக்கு என்று ஹைதராபாத்தின் Anandbagh பகுதியில் சொந்த வீடும் உள்ளது, இவரது கணவர் இறந்துவிட்டதால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான இவர் கோவில் கோவிலாக சென்றுள்ளார். அதன் பின் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக தற்போது பிச்சையெடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தான் இங்கிருக்கும் தர்காவில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த போது, என்னை பார்த்துவிட்டு, பார்த்தும் பார்க்காததும் போல் தன் மகன் சென்றதாகவும் கூறியுள்ளார். அமெரிக்காவில் இருக்கும் அவரது மகனை தற்போது தொடர்பு கொண்டுள்ளதாகவும், விரைவில் அவர் வந்தவுடன் அனுப்பி வைத்துவிடுவோம் என்று கூறியுள்ளார்.

மற்றொரு பெண்ணின் பெயர், Rabiya Baseera எனவும் ஹைதராபாத்தின் Langar Houz பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அமெரிக்காவின் கிரீன் கார்டு ஹோல்டர் ஆன இவருக்கும் வீடுகள் உள்ளது எனவும், மன உளைச்சல் காரணமாகவே இங்கிருக்கும் தர்காவில் பிச்சையெடுத்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

தற்போது 44 வயதான Baseera-வை அவரது உறவினர்களிடம் அனுப்பி வைத்துவிட்டதாக Arjun Rao கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers