மோடிக்கு நெருக்கமானவருக்கு தமிழக அரசில் உயர் பதவி

Report Print Gokulan Gokulan in இந்தியா
52Shares
52Shares
lankasrimarket.com

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான சோமநாதனுக்கு தமிழக அரசில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக பணிபுரிந்தவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சோமநாதன். கடந்த சில மதங்களுக்கு முன் மாநில அரசு பணிக்கு திரும்பியிருந்த அவருக்கு பொறுப்பு ஏதும் வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தமிழக அரசின், திட்டம் , வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கம் போன்ற துறைகளின் முதன்மை செயலாளராக சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளும் இவரது கண்காணிப்பின் கீழ் வரும் என தெரிகிறது.

முன்னதாக சென்னையில் நடைபெற்ற இவரது இல்ல திருமண விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டிருந்த நிலையில், இவர் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பது பல யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்