துபாயில் வசிக்கும் சென்னை மாணவர் செய்த சாதனை

Report Print Raju Raju in இந்தியா

நெதர்லாந்தில் நடந்த சர்வதேச அறிவியல் போட்டியில் பங்கேற்ற துபாயில் வசிக்கும் சென்னை மாணவர் வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள பள்ளிக்கூட மாணவர்களின் அறிவியல் படைப்புகளை வெளிக்கொண்டு வரும் வகையில் சர்வதேச ஒலிம்பியாட் அறிவியல் போட்டி நெதர்லாந்தில் நடந்தது.

இதில் தண்ணீர் மற்றும் தக்கவைத்தல் என்ற தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக பதிலளிக்கும் கட்டுரை போட்டி நடைபெற்றது.

இதில் 54 நாடுகளை சேர்ந்த 15 வயதுக்கு உட்பட்ட பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர்.

துபாயில் வசிக்கும் சென்னையை சேர்ந்த கவுசிக் முருகன் (15) என்ற மாணவர் இதில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

கவுசிக் முருகன் துபாயில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அவர் கூறுகையில், எதிர்காலத்தில் சிறந்த பொறியியல் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே என் நோக்கம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers