திருமணமான 7 நாளில் தாலியை கழட்டிவிட்டு காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்

Report Print Raju Raju in இந்தியா
581Shares
581Shares
ibctamil.com

தமிழ்நாட்டில் திருமணமான 7 நாளில் இளம் பெண் கணவரை பிரிந்து காதலனுடன் ஓடி போன நிலையில் பெண்ணின் கணவர் விஷம் குடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் பள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பலதா(18). இவருக்கும் ஆனந்தஜோதி (23) என்பவருக்கும் கடந்த மாதம் 22-ஆம் திகதி திருமணம் நடந்தது.

28-ம் திகதி மாமியார் வீட்டுக்கு புஷ்பலதா வந்த நிலையில் மறுநாள் காலை அரியூருக்கு ஆனந்தஜோதியுடன் காரில் சென்றார்.

அப்போது புஷ்பலதா செல்போனுக்கு அழைப்பு வந்த நிலையில் போனில் பேசியது யார் என ஆனந்தஜோதி கேட்டுள்ளார்.

அதற்கு நண்பர் என புஷ்பலதா பதில் அளித்தார்.

நமக்கு திருமணம் ஆகி விட்டதால், இனி நண்பராக இருந்தாலும் பேசக்கூடாது என ஆனந்தஜோதி கூறியுள்ளார்.

பின்னர் போனில் பேசியவரை தனது இருப்பிடத்துக்கு புஷ்பலதா வர சொல்லியுள்ளார்.

பைக்கில் அந்த நபர் வந்த நிலையில், அவர் பெயர் சாஸ்தா எனவும் அவரை தான் காதலித்து வருவதாகவும் புஷ்பலதா ஆனந்தஜோதியிடம் கூறியுள்ளார்.

அதற்கு ஆனந்தஜோதி, எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இனிமேல் எனது மனைவியுடன் போனில் பேசாதே என சாஸ்தாவை எச்சரித்துள்ளார்.

இதை கேட்டு கோபமடைந்த புஷ்பலதா தான் அணிந்திருந்த தாலி செயினை கழற்றி ஆனந்தஜோதியின் முகத்தில் வீசிவிட்டு காதலன் சாஸ்தாவுடன் பைக்கில் ஏறி சென்று விட்டார்.

இதையடுத்து மறுநாள் துக்கம் தாங்காமல் ஆனந்தஜோதி விஷம் குடித்துள்ளார்.

அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து நேற்று அவர் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையிலேயே இந்த விடயம் வெளியில் தெரிந்துள்ளது.

இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்