4 ஆண்டுகளாக காதல்! கலப்பு திருமணம்- உஷாவை நினைத்து கலங்கும் கணவர்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் போக்குவரத்து காவலர் தாக்கியதில் உயிரிழந்த கர்ப்பிணிப்பெண் உஷா, நான்கு ஆண்டுகளாக காதலித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜாவை திருமணம் செய்தவர் என தெரிய வந்துள்ளது.

திருச்சியில், போக்குவரத்து காவலர் தாக்கியதில் உயிரிழந்த உஷாவின்(34) திருமண வாழ்க்கை குறித்து தெரிய வந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள, சூலமங்களத்தைச் சேர்ந்த துரைக்கண்ணு- லட்சுமி தம்பதியின் மகன் தர்மராஜா என்கிற ராஜா(37).

தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவருக்கு, திருமணமான இரண்டு சகோதரிகள் உள்ளனர். இந்நிலையில், இவரும் உஷாவும் நான்கு ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.

அதன் பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணம் செய்துள்ளனர். ராஜாவின் வீடு குடிசையாக இருந்ததாலும், போதிய வசதி இல்லாததாலும் திருச்சி துவாக்குடியில் உள்ள தனது தாய் வீட்டிலேயே உஷா தங்கியிருந்துள்ளார்.

அவ்வப்போது கணவரின் வீட்டுக்கு வந்து ஓரிரு நாட்கள் தங்கியிருப்பார். திருச்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளி ஒன்றில் உஷா வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், உஷாவின் தோழியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உஷா தனது கணவருடன், திருச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது நடந்த துயரச் சம்பவத்தில்தான் அவர் உயிரிழந்துள்ளார்.

ராஜாவின் ஊரான சூலமங்களத்தைச் சேர்ந்த உமாபதி என்பவர் ராஜா - உஷா தம்பதி குறித்து கூறுகையில்,

'ராஜாவின் குடும்பம் ஏழ்மையான குடும்பம். இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். எனினும், காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டனர்.

உஷா, தன் கணவரோடு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது பலியாகி உள்ளார். உஷாவின் இழப்பால் ராஜாவின் குடும்பம் நிலைகுலைந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers