தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்கு: கவுசல்யா தந்தை முக்கிய மனு

Report Print Raju Raju in இந்தியா

உடுமலை சங்கர் கொலை வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரி, கவுசல்யா தந்தை உள்பட 8 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

திருப்பூர் அருகே உள்ள உடுமலைபேட்டையை சேர்ந்த சங்கர் என்பவரும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகள் கவுசல்யாவும் காதலித்து வந்த நிலையில் ஜாதி பிரச்சனையால் காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது.

இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சங்கரும் கவுசல்யாவும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்

இதையடுத்து கடந்தாண்டு மார்ச் 13-ந் திகதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கவுசல்யாவின் பெற்றோர் ஏவிவிட்ட கொலைகார கும்பல் சங்கர்- கவுசல்யாவை பட்டப்பகலில் வெட்டி சாய்த்தது.

இதில் சங்கர் உயிரிழந்துவிட, பலத்த வெட்டு காயங்களுடன் கவுசல்யா உயிர் பிழைத்தார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில் சின்னசாமி உட்பட ஏழு பேருக்கு இரட்டை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

தன்ராஜ் (25) என்பவருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சின்னசாமி உள்ளிட்டவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்