தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் ஐபிஎல்: CSK வீரர்கள் இதை செய்யமாட்டார்கள் என பதில்

Report Print Santhan in இந்தியா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த காலக் கெடுவுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.

இதனால், மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது அடுத்த மாதம் 3-ஆம் திகதிக்குள் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள உச்சநீதிமன்றம் உங்களின் கடமைகளில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது எனவும் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

காவேரி மேலாண்மை விவகாரம் தற்போது தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், சென்னை சேப்பாக்கத்தில் 2,000 பொலிசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், திரைப்பிரபலங்களான பாரதிராஜா, தங்கர்பச்சான், வி.சேகர், அமீர், ராம், வெற்றிமாறன், வ.கவுதமன், நடிகர் சத்யராஜ் ஆகியோ சென்னையி ஐபிஎல் போட்டி நடைபெறக் கூடாது என்று கூறி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக நடிகர் சத்யராஜ் சற்று ஆவேசமாகவே பேசினார்.

அப்போது அவர் போராட்ட மன நிலையில் உள்ள இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சி நடப்பதாகவும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஒரு அரசு மதிக்கவில்லை என்றால் அதற்கு என்ன சட்டம் இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார்.

இது மட்டுமா மாநிலம் முழுக்க சுற்றி வரும் ஆளுநர் இங்கு இருக்கும் பிரச்னைகளை கண்டுகொள்ளவில்லை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஓடும் பேருந்தில் சத்தம் போட்டுக் கொண்ட சென்ற இளைஞர் பேருந்தில் இருந்து கீழே விழுந்து பலியாகியுள்ளார்.

மேலும் சென்னை அணி வீரர்கள் நாளைய போட்டியின் போது கருப்பு பட்டை அணிந்து விளையாடினால், அது நாடு முழுவதும் கவனம் பெறும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

ஆனால் கிரிக்கெட் வீரர்கள் யாரும் கருப்புப்பட்டை அணிய மாட்டார்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பதிலளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் ரசிகர்கள் பேனர், கொடிகள், கருப்பு சட்டை அணிந்து வரக் கூடாது போன்ற பல தடைகளை தமிழக கிரிக்கெட் சங்கம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்