என்னை கொன்று விடுவார்கள்! ஆஷிபா தரப்பு வழக்கறிஞரின் பயம்

Report Print Fathima Fathima in இந்தியா
314Shares
314Shares
lankasrimarket.com

தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என தெரிவித்துள்ளார் ஆஷிபா வழக்கில் ஆஜராகும் தீபிகா ராஜாவத்.

காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி தரப்பில் தீபிகா ராஜாவத் என்பவர் ஆஜராகியுள்ளார், இந்நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நான் எத்தனை நாள் உயிரோடு இருப்பேன் என எனக்கு தெரியாது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம்.

தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன, என்னை இந்து மதத்துக்கு எதிரானவள் என கூறி புறக்கணிக்கிறார்கள்.

அவர்கள் என்ன செய்வார்கள் என்றே தெரியாது, எனது பாதுகாப்புக்காக உச்சநீதிமன்றம் செல்வேன், என் நிலையை உங்களால் புரிந்து கொள்ளமுடியும்.

நீதியின் பக்கமே நிற்பேன், சிறுமி ஆஷிபாவுக்காக போராடுவேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஜம்மு காஷ்மீர் பார் அசோசியேஷன் தலைவர் தன்னை மிரட்டியதாகவும், இந்த வழக்கில் இருந்து விலகுமாறு தன்னை எச்சரித்ததாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்