கள்ள உறவில் பிறந்த குழந்தை: கருணாநிதியை மோசமாக விமர்சித்த எச்.ராஜா

Report Print Athavan in இந்தியா

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திமுக தலைவர் கருணாநிதி மற்றும் கனிமொழி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து ட்விட்டரில் சர்ச்சையான கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா ? எனும் எச்.ராஜாவின் பதிவு திமுகவினர் மத்தியில் பரபரப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரில் ஆசிரியரின் மகளாக பிறந்து பேராசிரியராக பணியில் சேர்ந்த நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறான வழிநடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் கவர்னருக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த சர்ச்சையின் காரணமாக இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் விளக்கம் அளித்தார்.

அப்போது செய்தியாளர் சந்திப்பின் இறுதியில் பெண்பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளிக்காமல் அவர் கன்னத்தை ஆளுநர் தடவிக் கொடுத்தார்.

இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் பத்திரிக்கையாளர் கவர்னரின் செயலை கண்டித்து “அவர் பாராட்டுவதற்காக ஒரு தாத்தாவைப் போல் பாசமாக தட்டியிருக்கலாம். ஆனால், ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரைத் தொடுவது என்பது மிகவும் தவறானது.” என்று ட்விட்டரில் கருத்து பதிவிட்டார்.

இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாக திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைபிடிப்பது அவசியம். பெண் பத்திரிக்கையாளரின்அனுமதி இல்லாமல், அவரை தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை,” என்ற தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும்விதமாக மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் எச்.ராஜா இன்று பதிவிட்டுள்ள கருத்தில், அவர் கனிமொழியை கீழ்தரமான வார்த்தைகளில் விமர்சிப்பது போல் பதிவிட்டுள்ளார் அந்த பதிவு இதோ

இந்த சர்ச்சை பதிவுக்கு பதிலடியாக திமுகவினரும் சமூக வலைத்தளங்களில் எச்.ராஜாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்