நாங்கள் எல்லோரும் ஓடி ஒளிந்தோம்! தூத்துக்குடி பெண்கள் கண்ணீர் பேட்டி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாகிச்சூட்டில் நாங்கள் எல்லோரும் ஓடி ஒளிந்ததாக அங்கிருக்கும் பெண்கள் கூறியுள்ளனர்.

தூத்துக்குடியில் பொதுமக்களின் மீது பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் தமிழகமே பதற்ற நிலையில் உள்ளது. இதன் காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளிலும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடியின் திரேஸ்புர பகுதியில் இருக்கும் பெண்கள் நடந்த சம்பவத்தை விளக்கியுள்ளனர். பொலிசார் இங்கே எப்படி துப்பாக்கிச் சூடு நடத்தலாம், நாங்கள் எல்லோரும் ஒவ்வொரு பக்கமும் ஓடி ஓடி ஒளிந்தோம்.

இரவு நேரத்தில் திடீரென்று வந்து யாரோ கதவை தட்டுகிறார்கள், யார் என்றே தெரியவில்லை. அரசு எங்களின் பாதுகாப்பிற்கு தானே இருக்கிறது, எங்களை சாகடிப்பதற்கா இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

மேலும் கலவரம் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக தகவல் வந்தது, இதனால் நாங்கள் உடனடியாக வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தோம்.

அப்போது திடீரென்று வந்த பொலிசார் மளமளவென சுட்டுத் தள்ளிவிட்டு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...