கர்நாடக முதல்வராக பதவியேற்றார் குமாரசாமி

Report Print Kabilan in இந்தியா

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பதவி ஏற்றுக்கொண்டார்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், பா.ஜ.க 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதனைத் தொடர்ந்து, 104 பேர் ஆதரவுடன் எடியூரப்பாவும், காங்கிரஸ் உள்ளிட்ட 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் குமாரசாமியும் ஆட்சியமைக்க வாஜுபாய் வாலாவிடம் உரிமை கோரினர்.

அதன் பின்னர், பா.ஜ.க கட்சியின் எடியூரப்பாவை முதல்வராக ஏற்று ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எனினும், உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததால் எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார்.

அவர் பெரும்பான்மையை நிரூப்பிக்க வேண்டும் எனக் கூறி ஆளுநர் 15 நாட்கள் கால அவகாசம் அளித்திருந்தார். ஆனால், மறுநாளே பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர், காங்கிரஸ் கூட்டணியுடன் 117 எம்.எல்.ஏக்களின் ஆதர்வு கொண்ட குமாரசாமியை, பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

மே 21ஆம் திகதி குமாரசாமியின் ஆட்சி அமைவதாக இருந்தது. ஆனால், அன்றைய தினம் ராஜீவ் காந்தி நினைவு தினம் என்பதால், பதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று குமாரசாமி கர்நாடக மாநிலத்தின் முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார். அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அத்துடன், கர்நாடகாவின் துணை முதல்வராக காங்கிரஸை சேர்ந்த பரமேஸ்வரா பதவியேற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். குமாரசாமி கர்நாடக மாநிலத்தின் 24வது முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

ANI
HT Photo

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...